புதிய படத்தில் நடிக்க உள்ள குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. முதல் சீசனை விட மிகவும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பிரபலமானார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஸ்வின் மற்றும் புகழ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பிரபல இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் அஸ்வின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு சாலமன் தற்போது ‘கும்கி 2’ படத்தை அறிமுக நாயகர்களான மதி மற்றும் ரித்தா ராவ் ஆகியோரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் அஸ்வின் நடிக்க உள்ள படம் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு