வடமாநிலங்களில் ஒரே நாளில் 22 பேருக்கு டெங்கு

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளிலும் அம்மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இது குறித்து, முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் புரே சிங் சேத்தியா கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதனால், மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 38 நோயாளிகள் குழந்தைகள் ஆவர். அதனால் இந்த விவகாரம் தீவிர கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு