தமிழகத்தில் புதிய நெறிமுறைகளுடன் பள்ளிகள் தொடக்கம் !

tn_students
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா தொற்று இருப்பதால் புதிய நெறிமுறைகளை பின்பற்றப்படும் என்று தெரிவித்தது.

செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை அறிவித்துள்ளது.