ஏழுமலையானை தரிசிக்க புதிய விமான பயண திட்டம் !

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் பக்தர்களுக்காக சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பாலாஜி தர்‌ஷன் என்ற பெயரில் விமான பயணம் மூலம் திருப்பதி வந்தடைய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணங்கள் தங்கும் விடுதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோவில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றைக் கொண்ட பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நபருக்கு 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் காலை 6.50 மணிக்குப் புறப்படும் இந்த விமானம் காலை 9.20 மணிக்குத் திருப்பதி வந்தடையும், பிறகு பயணிகள் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து காளஹஸ்தி, சந்திரகிரி கோட்டை, பத்மாவதி தாயார் கோவில் தரிசனம்.

பிறகு இரவு விடுதியில் தங்கி மறுநாள் அதிகாலை ஏழுமலையானை விரைவு தரிசனத்தில் வழிபட ஏற்பாடு செய்யப்படும் அதன் பின்னர் திருப்பதியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.