இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் கடுமையாகப்பரவுகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த முறை தீவிரம் கூடுதலாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன.

அதாவது வழக்கமான கொரோனா நோய் அறிகுறிகளான இருமல், காய்ச்சல் இல்லாமல், மூட்டு வலி, பலவீனம், பசியின்மை, கோவிட் நிமோனியா ஆகியவற்றோரு கொரோனா பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மூக்கு, தொண்டைப் பகுதியில் தொற்றி பிறகு நுரையீரலுக்குப் பரவாமல் இப்போது நேரடியாக நுரையீரலையே தொற்றுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றி விரைவில் ஏற்படுகிறது, காய்ச்சல் இல்லாமல் ஆனால் எக்ஸ்-ரேயில் ஒரு மித நெஞ்சு நிமோனியா இருப்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது.