புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது – தமிழகம் !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கரோனா தொற்று தமிழகத்தை தாக்கி வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் முழு முடக்கத்தை முறையாக கடைப்பிடிக்கவில்லை.

அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும்.