Nellai student new record: நெல்லை மாணவி புதிய சாதனை

nellai-girl-make-record-in-high-jump-at-odisha
நெல்லை மாணவி

Nellai student new record: ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் பெண்களுக்கான 81வது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்த தடகள போட்டிகள் கலிங்கா டெக்னாலஜியில் உள்ள கிங் அத்லெட்டிக்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டன. கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொணடனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவியான கிரேசினா மெர்லி தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் கிரேசினா மெர்லி மிகவும் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதன்படி உயரம் தாண்டும் போட்டியில் கிரேசினா மெர்லி 1.84 மீட்டர் உயரம் தாண்டினார்.

இது தான் அதிகபட்ச உயரம் என்பதால் அவர் முதலிடம் பெற்றார். அத்துடன் கிரேசினா மெர்லி தங்கப் பதக்கத்தையும் தட்டி சென்றார். அட்திலும் குறிப்பாக புதிய சாதனை ஒன்றை கிரேசினா மெர்லி படைத்துள்ளார்.

அதாவது கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த தேவசனா ஏஞ்சல் என்பவர் 1.83 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து இருந்தார்.

அந்த சாதனையை தமிழ்நாட்டை சேர்ந்த கிரேசினா மெர்லி தகர்த்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். புதிய சாதனை படைத்த மாணவிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேப்போல் இந்த சாதனையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் அவரது பெற்றோர், சக மாணவ, மாணவிகள், ஊர் மக்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Nellai student new record

இதையும் படிங்க: Tamil Nadu students: உக்ரைனில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி