நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் அதிசயம்- வெதர்மேன் சர்ப்ரைஸ் ட்வீட்

Chance-of-rain-in-Tamil-Nadu-from-March-3--Meteorologist-Information
வெதர்மேன் சர்ப்ரைஸ் ட்வீட்

Weatherman: பொதுவாக தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை காலம் தான். எப்போதுமே டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மிதக்க காரணம் இந்த மழை தான். ஒரு ஆண்டில் தமிழ்நாடு பெறும் மழையில் 50 முதல் 60 சதவீதம் மழை வடகிழக்கு பருவமழையால் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே மற்ற காலங்களில் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது இந்த பருவக் காலமே. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இது நீடிக்கும். அதற்குப் பின் மார்கழி பணி வாட்டி வதைக்கும். பொங்கலுக்குப் பிறகு ஓரளவு பனி குறையும்.

ஆனால் இம்முறை பனிக்காலம் சற்று அதிகமாகவே இருந்தது. பிப்ரவரியில் கூட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பனி சூழ்ந்திருந்தது. இச்சூழலில் தமிழ்நாடு மெல்ல மெல்ல கோடைக்காலம் எனும் அரக்கனின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்களால் பனியைக் கூட தாங்கி கொள்ள முடியும். வெப்பத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது. மார்ச் மாதம் நெருங்கி வருவதால் இப்போதே சூரியன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் கோடைக்காலங்களில் மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக அவ்வப்போது திடீரென மழை பெய்யும்.

அந்தச் சமயம் பூமி மட்டுமல்ல மக்களின் மனங்களும் குளிரும். இதம் தரும் அந்த கோடை மழை அடிக்கடி வருவதில்லை. ஆனால் இந்தாண்டு அந்த மழை சற்று அதிகமாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். ஏற்கெனவே மார்ச் 1ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையொட்டி பிரதீப் ஜானும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நீண்ட காலங்களுக்குப் பிறகு வானிலையில் மிக முக்கிய அரிதான நிகழ்வு நடக்கவிருக்கிறது. தமிழ்நாடு மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மிக மிக அரிதான நிகழ்வைக் காணவிருக்கிறது. பொதுவாக இந்த நாட்களில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக சற்று கூடுதலான மழை பொழிய போகிறது. கடந்த 150 ஆண்டுகளில் 1984 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே மார்ச் மாதட்த்தில் அதிக மழை பொழிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Equatorial Rossby (ER) Wave to bring a very rare event for Tamil Nadu days to watch is March 3-6, 2022

இதையும் படிங்க: Tamil Nadu students: உக்ரைனில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி