நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நீக்கம்

தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பர், 13 மற்றும் அக்., 14ல், நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று(அக்.,16) வெளியிட்டது. இதில், 7.71 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக சர்ச்சை எழுந்தது. தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி , மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது போன்ற புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த பக்கத்தில், முடிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம், மாற்றப்படலாம் அல்லது தற்காலிகமாக மாற்ற முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.