தமிழகத்துக்கு நீட் தேவையில்லை- பொன்முடி

எம்.பி.பி.எஸ் படிப்புக்காக தேசிய அளவில் நீட் என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

ஆனால், இத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் கிராமபுற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன், மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , தமிழகத்தில் நீட் தேர்வு அவசியம் இல்லை என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.