சத்தம் இல்லாமல் அதிகரிக்க தொடங்கிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு !

கொரோனாவின் இரண்டாம் அலை தொற்றை தடுக்க அரசுகள் போராடி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.