என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் மகாபாரதம் தொடர்பான குறிப்பும் சர்ச்சையும் !

என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மகாபாரதம் தொடர்பான குறிப்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.போரில் கிருஷ்ணனை ஜராசந்தன் வென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது தான் சர்ச்சைக்குக் காரணம்.

மேலும் வெளியான தகவல்படி, 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுக்கு பால மகாபாரதக் கதை என்ற புத்தகம் கேந்திரிய வித்தியாலயாவின் பாடத்திட்டத்தில் உள்ளது. இது சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி எழுதிய மகாபாரதக் கதையின் சுருக்கமாகும். இதை வாசித்த இந்து அறிஞர்கள், இதில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய வரலாற்று பேராசிரியர் ராஜ்வந்த் ராவத், கிருஷ்ணர் போரில் தோற்றதாக மகாபாரதத்தில் இல்லை. இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் நிச்சயமாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்றார்.