Nationwide bank strike : வங்கிகள் வேலைநிறுத்தம் !

nationwide bank strike
வங்கிகள் வேலைநிறுத்தம்

United Forum of Bank Unions (UFBU) யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் (UFBU) விடுத்த அழைப்பின் பேரில், வங்கியாளர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் சமீபத்திய குளிர்காலக் கூட்டத் தொடரில், வங்கிச் சட்டத் திருத்த மசோதா, 2021ஐ தாக்கல் செய்யும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.Nationwide bank strike

தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் நரேஷ் கவுர் கூறுகையில், “சமீபத்திய தகவலின்படி, இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மக்களின் பணத்தை கையாள்கின்றன. வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது மக்களின் பணத்தை தனியாரிடம் கந்து வட்டிக்கு ஒப்படைப்பதாகும்.