மோடி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட நுாறு வார்டுகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி, 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது.

மாநில பொது செயலாளர் செல்வகுமார், மாநகர தலைவர் நந்தகுமார் பங்கேற்கின்றனர்.காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் காலை 11:00 மணிக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், 12,000 இளம்பெண்களுக்கு மாதந்தோறும், இலவச சானிடரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, இதம் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கிறார்.

ஆர்.எஸ்.புரம் மண்டல் சார்பில் பகல் 1:00 மணிக்கு, சுந்தரம் வீதியில் சிறப்பு அன்னதானமும், உக்கடம் மண்டல் சார்பில் மேற்கு உக்கடத்தில், மாலை 5:00 மணிக்கு 200 பெண்களுக்கு சேலையும் வழங்கப்படுகிறது.செல்வபுரத்தில் நடைபெறும் விழாவில், 71 மாணவர்களுக்கு கல்விச்செலவிற்கு தலா ஆயிரம் ரூபாயும், 71 மகளிருக்கு சில்வர் குடமும், 71 பெண்களுக்கு சேலையும், 71 ஆண்களுக்கு வேட்டியும் வழங்கப்படுகிறது.மதியம் 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தெலுங்குபாளையம் பிரிவிலுள்ள பெட்ரோல் பங்க்கில், பொதுமக்களில் 71 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மண்டல் தலைவர் குமார் வழங்குகிறார்.மாநில இளைஞரணி பொதுசெயலாளர் பிரீத்திலட்சுமி தலைமையில், கவுண்டம்பாளையம் அசோக்நகரிலுள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், மோடி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு, அலகு குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்