நாளை (12ம் தேதி) நடைபெற உள்ள நீட் தேர்வின் போது கட்டாயம் என் 95 மாஸ்க் அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான( 2021) நீட் தேர்வு நாளை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் என். 95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும்.



