அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 3 பேர், மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான மருத்துவமனையாக உள்ளதால் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.



