லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்

இந்தியாவின் பெரும் கோடீசுவரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

லண்டனின் பக்கிங்ஹாம்சையரில் உள்ள 300 ஏக்கர் கிளப் ஒன்றை தங்கள் வசிப்பிடமாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆனால் இந்த தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் தனது குடும்பத்துடன் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை’ என்று தெளிவுபடுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பலவீனமான கூந்தலை பராமரிப்பது எப்படி !