கடலுக்கு அடியில் குவிந்து கிடைக்கும் முகக்கவசங்கள்

கரோனா தொற்று வந்த பிறகு நாம் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்க பட்டுள்ளது.மேலும் அணைத்து நாடுகளும் மற்றும் அரசும் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது.அப்படி பட்ட முகக்கவசங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு பிறகு எங்கு செல்கிறது.

புதுவை மாநிலத்தை சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டிரைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் நீச்சல் பயிற்சிக்கு சென்றனர்.அப்போது மக்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் ஆழ்கடலில் மீன்களுக்கு மத்தியில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மருத்துவ கழிவை சிலவற்றை அங்கிருந்து சுத்தம் செய்தனர்.இந்த கழிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்க படும் .