ரஜினிக்கு மோடி வாழ்த்து

தமிழ் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1966-ம் ஆண்டு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் மூன்றாவது நபராக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.