தமிழகத்தில் இயற்கை எரிவாயு திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், முக்கியமான சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும்.

ராமநாதபுரம் – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கேசோலின் கந்தக நீக்கப் பிரிவு ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.