டீ விற்ற ரயில்வே ஸ்டேஷன் திறந்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளுக்கு முன், மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்து வந்தார். பிரதமரான பின், மோடி பலமுறை இதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில், வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன், தற்போது ரூ. 8 கோடி செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வசதிகளுடன் புனரமைக்கப்பட்டடுள்ளது. இந்த ஸ்டேஷனை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்.

இவற்றை தவிர புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன், ஆமதாபாத் அறிவியல் நகரில் புதிய பிரிவுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.