தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரியில் தினசரியும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, கூடலூர், நடுவட்டம் பகுதியில் 4 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மேல்பவானி, சோலையாறு, ஏற்காடு, தருமபுரி, தேக்கடி, தேனியில் தலா 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.