தமிழகத்தில் அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,544 -ல் இருந்து 1,587 ஆக சற்று அதிகரித்துள்ளது.

18 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,594 பேர் குணமடைந்து உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக இருந்த நிலையில் இன்று (08ம் தேதி) 179 ஆக குறைந்துள்ளது.