நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

makkal needhi maiam
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

200 வேட்பாளர்கள் அடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதிமிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: Brahma kamalam: நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் மலர்..!