மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்த், ராகுல் காந்தி, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார்.

இதுதொடர்பான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலினை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.