‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

கீர்த்தி சுரேஷ் – மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இதையடுத்து வருகிற மார்ச் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றி உள்ளனர். அதன்படி வருகிற மே 13-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.