வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முழு ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் கடந்த 13-ந்தேதி நடந்தது. இதில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



