நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, நத்தம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று, ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கி திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

பின்பு பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.