நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் கூறுகையில், ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22%ஆக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.