பயிர்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு

கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘பயிர்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81 சதவிகிதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அதன் மூலம் 516 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதிலும் சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர்க்கடன் வழங்கும் போது கூட்டுறவு சங்கங்கள் ஏனையை வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கணினிகள் உள்ளதாகவும் அது சாம்பிரானி போடுவதற்காகவா உள்ளது எனவும் அதில் எதுவுமே பதிவாக இல்லை எனவும் கேள்விஎழுப்பினார்.