அட கடவுளே..ஆற்றில் கவிழ்ந்த பேருந்து !

மேகாலயா மாநிலம் துராவிலிருந்து ஷில்லாங் பகுதிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் துராவிலிருந்து மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கிற்கு பயணித்த பேருந்தில் 21 பயணிகளும் ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் பயணம் மேற்கொண்டனர்.

அதிகாலை வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நோங்ச்ராம் என்ற பாலத்திலிருந்து ரிங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 16 பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் 5 பேர் இறந்துள்ளனர்.

இதையும் படிங்க : இளம் நடிகை செளஜன்யா தற்கொலை !