இந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்

விஜய் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். கொரோனா முதல் அலைக்குப் பின் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வர தயங்கிய காலகட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற படம். இதனை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான் கான் திட்டமிட்டுள்ளார்.

சல்மான் கானின் திரை வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக்குகளே. அதனால், தற்போதைய தோல்வியிலிருந்து மீள மீண்டும் ரீமேக்கை நாடியுள்ளார். இப்போது அவரது தேர்வு, விஜய் நடித்த மாஸ்டர்.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களை கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் கதைக்கரு சல்மானுக்கு பிடித்திருப்பதாகவும், அவரது அடுத்த படம் மாஸ்டர் ரீமேக்காக இருக்கும் எனவும் பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரலாம்.