கங்கண சூரிய கிரகணம் பற்றி தெரியுமா?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) நிகழ்கிறது என நாசா அறிவித்துள்ளது. சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில், முழுமையாக மறைக்க முடியாமல் சூரியனின் கருப்பு பகுதியைச் சுற்றிலும் ஒரு நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கங்கண சூரிய கிரகணம் ஆகும்.

இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணிக்குத் துவங்கி மாலை 6.41 மணி வரை நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்களால் மட்டுமே இதை காணமுடியும். அதாவது, அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலிருந்து மாலை 5.52 மணியளவில் மிகச் சிறிய பகுதியை மக்கள் காணலாம். அதேபோல், லடாக்கின் வடக்கு பகுதியில், கிரகண நிகழ்வின் கடைசி நேர நிகழ்வினை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.