Local Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை

march-8th-local-holiday-in-kanyakumari
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

Local Holiday: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. உலக புகழ் பெற்ற இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் இருமுடி ஏந்திவந்து வழிபாடு செய்வது வாக்கம்.

பதவதியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும். இந்த வருட மாநி மாத விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. கொடியை கோயில் தந்திரி மகாதேவர் ஐயர் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக்கொண்டார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சாயரஷ்ய பூஜை, அத்தாள பூஜை, உஷ பூஜை, உச்சகால பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், தங்க தேர் வீதி உலா உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உலா மார்ச் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“மண்டைக்காடு பகதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு, மார்ச் 8-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஏப்ரல் 9-ம் தேதி சனிக்கிழமை பணி நாள்” என கூறப்பட்டுள்ளது.

Mandaikadu Bhagathiyamman Temple Ceremony

இதையும் படிங்க: Russia-Ukraine crisis: உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு