பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது !

narendra modi
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பங்குகொள்ளும் மன் கி பாத் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று வானொலி நிகழ்ச்சியாகும். அந்த வகையில் அவரது 73-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். இந்த வருடத்தின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை ,ஆஸ்திரேயாவுக்கு எதிரான இந்தியா வெற்றி, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் அவர் காரோண தடுப்பூசி போடும் நாடுகளில் நம் நாடு மிக வேகமாக 30 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

இந்தியாவில் காரோண தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரியதாக இருக்கிறது.இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலகத்துக்கு முன்மாதிரியாக உள்ளது. உலகத்தின் எல்லா நாடுகளையும் விட நாம் நம் குடிமகன்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம்.மேலும் குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடி அவமானப்படுத்தப்பட்டதால் இந்தியா வேதனையடைந்தது என்று பேசினார்.