கரோனாவிலிருந்து மீண்டார் மன்மோகன் சிங் !

கரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் விரைவில் நலம் அடைய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருந்த மன்மோகன் சிங் இன்று முழு உடல்நலம் பெற்று கொரோனாவை வீழ்த்தினார். அந்த வகையில் மன்மோகன் சிங் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.