காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் காலமானார் – கேரளா !

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.வி. பிரகாஷ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சி சார்பில் நிலாம்பூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

பிரகாஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் பிரகாஷ் காலமானார்.பிரகாஷின் மரணம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷின் மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இரங்கல் ட்வீட் செய்துள்ளார் நிலாம்பூர் காங்கிரஸ் வேட்பாளர் விவி பிரகாஷின் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

அவரின் கடின உழைப்புக்கு எப்போதுமே நினைவுகூரப்படுவார். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.