முன்னாள் பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை !

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.பிறகு அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.தற்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது

மன்மோகன் சிங்கிற்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது ஆனால் அவரது பிளேட்லெட் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

மன்மோகன் சிங்கை நலம் விசாரிக்க சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு !