இன்று மனீஷா கொய்ராலா பிறந்தநாள்…!

ரசிகர்களின் உள்ளங்களை அழகால் கொள்ளை அடிப்பவர்கள் ஒரு சிலர். ஒரு சிலர் நடிப்பால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் கவர்ச்சியால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் அழகு மற்றும் நடிப்பால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் தான் நடிப்பு, அழகு, கவர்ச்சி என எல்லாவற்றாலும் மனதை கொய்து எடுப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் மனீஷா கொய்ராலா.

1942 ஏ லவ் ஸ்டோரி என்ற இந்திப்படமும், தமிழில் மணிரத்னத்தின்; பம்பாய் படமும் இவரை திரும்பிப் பார்க்க வைத்தன. 1996ல் வெளியான அக்னி சாக்ஷி என்ற இந்திப்படம் இவரது கேரியரை 1 படி உயர்த்தியது. 1997ல் ஷாருக்கானுடன் இவர் நடித்த இந்திப்படம் தில் சே. மணிரத்னம் இயக்கிய இப்படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது.

மனீஷா கொய்ராலா பிறந்தநாள் இன்று என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.