Man donates kidney: கிட்னியை தானமாக கொடுத்த காதலன்

Mexican man donates kidney
காதலனின் கிட்னி தானம்

Man donates kidney: அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

காதல் என்றால் சும்மா இல்லை வேற லெவல் காதல் இது. நம்ம ஊர் பசங்க பெண்களுக்கு கிஃப்ட்களை மட்டும் தான் அள்ளி தருவார்கள். ஆனால் இவர், தனது கிட்னியையே எடுத்துத் தந்துள்ளார். அதாவது தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதால் அதைத் தானமாகக் கொடுத்துள்ளார்.

‘நெஞ்சிருக்கும் வரை’ நரேன் போல இவர் செய்த காரியம் அனைவரையும் வியக்கச் செய்தது என்றால், இதற்குப் பின்பு அவரது காதலி செய்த காரியம் இவரையே திகைக்கச் செய்துள்ளது. அதாவது கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் இவரது காதலி இவருடன் பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன இந்த மெக்சிகோ தேவதாஸ் தனது டிக்டாக்கில் புலம்பித் தள்ளியுள்ளார்..

இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், ‘எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் கிடைக்கவில்லை என்பதால் நான் எனது காதலியின் தாயின் உயிரைக் காக்க எனது கிட்னியை தானமாகக் கொடுத்தேன். ஆப்ரேஷனும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், ஆப்ரேஷன் நடந்து ஒரே மாதத்தில் என்னுடன் பிரேக்அப் செய்து கொண்டு வேறு ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டார்’ என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ டிக்டாக்கில் வேகமாகப் பரவியது. பல்வேறு ஆண்களும் தங்கள் காதலிகளால் எப்படி நடத்தப்பட்டோம் என்ற அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ வெளியான சில நாட்களில் சுமார் 14 மில்லியன் பேரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டது. இதற்கு நெட்டிசன்கள் கொடுத்த ஆதரவு உசீல் மார்டினெஸை இந்த மோசமான பிரேக்அப்பில் இருந்து மீண்டு வர உதவியுள்ளது. இது தொடர்பாக அவர் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நான் இப்போது நன்றாக இருக்கிறேன். அவரும் நன்றாகவே இருக்கிறார். நாங்கள் இப்போது நண்பர்களாக இல்லை. ஆனால் ஒருவரையொருவர் வெறுக்கவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதே தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம் என்று நெட்டின்சன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த உசீல், ‘என்னிடம் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தன. அதில் ஒன்றை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். எனவே இந்த தவற்றை என்னால் நிச்சயம் மீண்டும் செய்ய முடியாது’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் டிக்டாக் மட்டுமின்றி இணையம் முழுவதும் பரபரப்பாகியுள்ளது.

இதையும் படிங்க: Dulquer salman: நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று..!