Dulquer salman: நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று..!

dulquer salman
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று

Dulquer salman: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பரவிய நிலையில், அவரது மகனும் முன்னணி நடிகருமான துல்கர் சல்மானுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் நேற்றை விட 35.6 சதவீதம் அதிகரித்து 46,387 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பிப்ரவரி மாதம் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்பு உச்சத்தை அடையும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி கடந்த ஜனவரி 16ம் தேதி தனக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 70 வயதாகும் நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பாதித்த நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்து விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனைகளை செய்தன.

இந்நிலையில், 4 நாட்கள் கழித்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் தனக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். லேசான கொரோனா பாதிப்பு தான் என்றும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் ரசிகர்கள் தவறாமல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஹே சினாமிகா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான க்ரூப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை குஷ்பு துல்கர் சல்மான் ட்வீட்டுக்கு கீழ் ஒன்றும் கவலைப்படாதே DQ நல்லா ரெஸ்ட் எடுங்க.. விரைவில் பரிபூரணமாக குணமாகி வர வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

நடிகர் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என மலையாள திரையுலக ரசிகர்கள் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரபலங்களும் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: supreme court: தந்தை சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு- உச்ச நீதிமன்றம்