man kills father to claim insurance : காப்பீடு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன் !

man kills father to claim insurance : காப்பீடு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்
காப்பீடு பணத்திற்காக அப்பாவை கொன்ற மகன்

man kills father to claim insurance : பாரத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக தனது தந்தையைக் கொன்றுள்ளான்.

தகவலின்படி,இறந்த தந்தை தனது மகன் ராஜேஷுடன் ஃபரிதாபாத்தில் வசித்து வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ராஜேஷ் தனது தந்தை மொஹ்காமுக்கு நான்கு வெவ்வேறு வங்கிகளில் ரூ.40 லட்சம் விபத்துக் காப்பீட்டுக்காக காப்பீடு செய்திருந்தார். அதன்பிறகு இந்த இன்சூரன்ஸ் மீது போலியான க்ளெய்ம் எழுப்ப திட்டமிட்டார், இதற்காக மொஹ்காமை கிராமத்திற்கு கொண்டு வர திட்டம் தயாரிக்கப்பட்டது.

டிசம்பர் 24-ம் தேதி, ராஜேஷ் தனது நண்பர்களுடன் தனது தந்தையை வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டார். மாலையில் செல்லும் வழியில் தீதாவலி கிராமம் அருகே சந்தர்ப்பம் பார்த்து தந்தையையும், உடன் இருந்தவர்களையும் முதலில் மது குடிக்க வைத்த ராஜேஷ், உடன் வந்தவர்களுடன் சேர்ந்து தந்தையை சுத்தியலால் தாக்கி கொன்றார். பின்னர், விபத்து போன்று தோன்றும் வகையில் சடலத்தை சாலையோரம் வீசியுள்ளனர்.man kills father to claim insurance

எனினும் மூன்று குற்றவாளிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.25 வயதான விஜயேந்திரா, 26 வயதான கன்ஹா ஆகிய இருவரும் ராஜேஷ் சிங்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : covid cases in tn:தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா !