ரயில்வே அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் தீ – கொல்கத்தா !

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் 13’வது மாடியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குறைந்தது 10 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது வரை வந்த தகவலின் படி யாருக்கும் இதுவரை காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கின்றன. கொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள புதிய கொயிலகாட் கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ரயில்வே அலுவலகங்கள் உள்ளது.

ஆனால் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.நாங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடுகிறோம், கட்டிடத்தின் பெரும்பாலான தளங்களில் இருந்து நாங்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளோம் என்று கொல்கத்தா காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.