நாளை இரவு மகா சிவராத்திரி விழா..!

மகா சிவராத்திரி விழா நாளை( 11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. நாளை இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.

திருமங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தில் உள்ள பாலாறு அய்யன் கோவிலில் இரவு 11 மணி அளவில் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பயறு வகைகள் கொண்டுவந்து அவித்து அதனை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவர். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவு இடித்தும் பிரசாதம் வழங்கப்பட்டு, விடிய, விடிய விழித்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

உசிலம்பட்டியில் உள்ள திடியன் கைலாசநாதர் கோவில், ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது.

குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நாளை மாலை 6 மணி, 9 மணி, 12 மணி, 3 மணி என 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சிவராத்திரி விழா விடிய, விடிய நடைபெறுகிறது.