Aavin scam: ஆவின் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி

aavin cheating
தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ.30 கோடி மோசடி

Aavin scam: ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி 30 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் அரசு துறையில் ஆய்வுகள் நடைபெறாமல் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.30 கோடி வைப்புத்தொகையில் தரமற்ற இயந்திரங்களை வாங்கியது நிர்வாக இயக்குனர் சுப்பையா ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் வைப்புத்தொகை மூலம் பல கோடி ரூபாய் தரமற்ற இயந்திரங்களை வாங்கி மோசடி செய்திருப்பது தற்போது புகாரின் அடிப்படையில் ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆவின் நிறுவனத்தில் பால் டப்பாக்களை முறைகேடாக வெளியே எடுத்து சென்று பால் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதாகவும் அதில் கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5,000 டப்பாக்கள் எலெட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் பொருத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை அவை செயல்படாமல் இருப்பது முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவிகள் தரமற்ற முறையில் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், பொருத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த கருவிகள் பயன்பாட்டில் இல்லை நிர்வாக இயக்குனர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ஆவின் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துவதை குறைப்பதற்காக மதுரை கப்பலூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 10 ஏக்கர் நிலத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் சூரியஒளி மின் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அந்த திட்டம் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் தரமற்ற சோலார் பேனல்கள் பொருத்தியது குறித்து முன்பே தணிக்கை குழு சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் கொரோனா காலத்தில் ஆய்வுகள் நடைபெறாமல் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி தரமற்ற இயந்திரங்களை வாங்கி ஆவின் நிறுவனத்தில் 30 கோடி ரூபாய் வைப்புத்தொகையில் வீண் அடித்திருப்பதாக தற்போது ஆவின் நிர்வாக இயக்குனர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Minister Periyasamy: நகைக்கடன் தள்ளுபடியில் மீண்டும் ஒரு வாய்ப்பு