மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமி உடல்நிலை கவலைக்கிடம்!

மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் தீவிர சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை ஆதினத்திற்கு 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.

அவருக்கு வயது 77 . இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.