பாடலாசிரியர் சினேகனுக்கு டும் டும் டும் !

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.மேலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.இந்த நிலையில் சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்ய இருக்கிறார். கன்னிகாக ரவி ‘தேவராட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இப்போது பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற 29-ம் தேதி கமல்ஹாசன் தலைமையில் எளிமையாக நடக்கிறது.