Lockdown in tamilnadu : தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு !

Lockdown in tamilnadu : தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு

Lockdown in tamilnadu :  புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன

ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க நாளை முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.Lockdown in tamilnadu

மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.- அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.- சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.- இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.- அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இதையும் படிங்க : Rajendra Balaji arrested in Karnataka : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது !