Lata Mangeshkar’s Health : லதா மங்கேஸ்கர் உடல்நிலை !

Lata Mangeshkar's Health : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை
Lata Mangeshkar's Health : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை

Lata Mangeshkar’s Health : : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது .சோதனை செய்த பிறகு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு வயது 92 .

மேலும் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தற்போது கொரோனா அறிகுறிகளுடன் மும்பையில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நிமோனியா காய்ச்சலும் இருப்பது தெரியவந்துள்ளது.Lata Mangeshkar’s Health

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றார். லதா மங்கேஷ்கர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

இதையும் படிங்க : Kathak maestro Pandit Birju Maharaj died : கதக் மாஸ்ட்ரோ பண்டிட் பிர்ஜு மகராஜ் காலமானார் !