ஐபிஎல் 2020: டெல்லி கேபிடல்ஸ் அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக கர்நாடக லெக் ஸ்பின்னர் சேர்ப்பு

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீ்ச்சாளர் அமித் மிஸ்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்குப் பதிலாக புதிய லெக் ஸ்பின்னர் பிரவீன் துபே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான லெக் ஸ்பின்னர் பிரவீன் துபே இதுவரை கர்நாடக அணிக்காக 14 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 6.87 எக்கானமி வைத்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி ஷார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது டெல்லி அணி வீரர் அமித் மிஸ்ராவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

அந்த காயத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தினர். இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து அமித் மிஸ்ரா விலகுவதாக அறிவித்தார்.